பற்கள் பராமரிப்பு பற்றி விழிப்புணர்வு ஊட்டும் மருத்துவ நுால்.
மனித உடலில் முக்கிய உறுப்பான பற்களை பாதுகாக்க வேண்டிய அவசியம் குறித்து புரிதலை ஏற்படுத்துகிறது. முதல் அத்தியாயத்தில் பற்கள் பற்றி அறிமுகம் செய்கிறது. பற்களின் பயன்பாடு முழுமையாக கூறப்பட்டுள்ளது.
தொடர்ந்து, வாயை பராமரிக்காவிட்டால் ஏற்படும் விளைவுகள் அதை சீர்படுத்தும் வழிமுறைகளை எடுத்துரைக்கிறது.
பல் சொத்தையால் ஏற்படும் பாதிப்புகளை பட்டியலிட்டு அது வராமல் தடுப்பதற்கு போதிய தெளிவை ஏற்படுத்துகிறது. குழந்தைகளின் வாயை பேணினாலே உடல் நலத்தை காக்கலாம் என குறிப்பிடுகிறது. பற்களை பாதுகாக்க பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை எளிய நடையில் தரும் மருத்துவ நுால்.
– ஒளி