ஆங்கில மருத்துவத்தில் தமிழ் சொல், பொருள் தரும் அகராதி நுால்.
ஆங்கில வார்த்தைக்கு, ஒரு பொருள் இருக்கும். இதில் குறிப்பிட்டுள்ள ஆங்கில வார்த்தைக்கு, மருத்துவ மொழியில் விளக்கம் தரப்பட்டுள்ளது. அதன்படி பொருள் காண வேண்டும். உதாரணமாக, ‘அப்டக்ஷன்’ என்ற ஆங்கில சொல்லுக்கு சாதாரண அகராதியில் பொருள் வேறு. மருத்துவச் சொல் அகராதியில், ‘கையின் அசைவுகளில் ஒன்று மையத்தை நோக்கி நகர்தல்’ என குறிப்பிட்டுள்ளது.
நோய் எந்த வகை, எந்த கட்டத்தில் இருக்கிறது என்பதற்கு பதங்கள் பிரயாசையுடன் உருவாக்கப்பட்டுள்ளன. மருத்துவ சுருக்கத்தை பொருள் கொள்ளும் வழிமுறையும் கூறப்பட்டுள்ளது. மருத்துவம் பயில்வோருக்கு வரப்பிரசாத நுால்.
– டாக்டர் கார்முகிலோன்