அந்தக் காலத்தில் பாட்டிகள் சொன்ன மாயாஜால கதைகளின் தொகுப்பு நுால். சிறுவர்கள் படிப்பதற்கு ஏற்ப பெரிய எழுத்தில் அச்சிடப்பட்டுள்ளது.
சிறுமியை கதைநாயகி ஆக்கி அவர் சந்திக்கும் விசித்திர வினோத நிகழ்வுகள் சுவைபட எழுதப்பட்டுள்ளன. அதற்கு ஏற்ப பெரிய அளவில் படங்கள் கருத்தையும், கண்ணையும் கவர்கின்றன.
பாம்பு, பூரான், தேள், பல்லியை களிமண்ணால் செய்து அய்யனார் கோவிலுக்கு காணிக்கை செலுத்தும் திருவிழா பற்றிய கதை அபாரம். பொம்மை விஷப்பூச்சிகளை சிறுவர், சிறுமியர் தைரியமாக கையாண்டு அச்சத்தை குறைக்கும் வகையில் அமைந்துள்ளது. எருமைகள் மிதித்து எமனான கதை சுவாரசியமாக உள்ளது. சிறுவர்கள் கையை அலங்கரிக்க வேண்டிய புத்தகம்.
– சீத்தலைச்சாத்தன்