பள்ளி மாணவர்கள் மேற்படிப்புக்கு தக்க ஆலோசனை தரும் நுால். பள்ளி படிப்பு முடிந்ததும் நுழைவுத் தேர்வுகளே மாணவர் எதிர்காலத்தை நிர்ணயிக்கின்றன. அவற்றை முறையாக தெரிந்து பயிற்சி பெற்றிருந்தால் தான், அடுத்த கட்டத்துக்கு முன்னேற முடியும் என்ற நிலை உள்ளது. அதற்கு தகுந்த வழிகாட்டும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது இந்த புத்தகம்.
இந்தியா முழுதும் உயர் கல்வி நிறுவனங்களில் பட்டப் படிப்பில் எப்படி சேரலாம் என வழிகாட்டுகிறது. நுழைவுத் தேர்வுகளையும், அவற்றுக்கு தயாராகும் வழிமுறைகளையும் தருகிறது. தேர்வு வடிவம், அதை எதிர்கொள்ள பெற வேண்டிய பயிற்சி முறை, விண்ணப்பிக்கும் காலம், பாடத்திட்டம், மதிப்பெண் கணக்கீட்டு முறை என பல்வேறு தகவல்களையும் தரும் நுால்.
– ராம்