ஓய்வுபெற்ற தமிழாசிரியரின் தமிழார்வத்தை புலப்படுத்தும் நுால்.
மூன்று பகுதிகளாக கவிதைகள் படைக்கப்பட்டுள்ளன. கவியரங்கம், பத்திரிகைகளில் வெளியானவை, கடைசியில் கும்மிப் பாட்டும் இருக்கிறது. எல்லாம் இலக்கண நெறிக்கு உட்பட்டு உள்ளன. இனிமையாக, ‘தேன்... தேன்...’ என்று முடியும் பாடல்கள், புதுமையாக, ‘காது... காது...’ என சொல்லும் பாடல்கள் சிறப்பு சேர்க்கின்றன.
தமிழின் தொன்மை பற்றி புகழ்ந்து பாடப்பட்டுள்ளது. பிற மொழி கலப்பு வேண்டாம் என்கிறது. புயலுக்கு எதிராக, ‘வாழ்வை புரட்டி கோடி சேதம் விளைவித்து விட்டாய்’ என குமுறுகிறது. கொடிய இன்னல் தருவதாக ஆறு உறவுகளை சொல்வது அருமை. திவ்ய பிரபந்தத்தை போற்றுகிறது. தமிழ் நெஞ்சங்கள் விரும்பும் நுால்.
– சீத்தலைச்சாத்தன்