காது வலி, காது கேளாமை குறைபாடுகளை நீக்குவது பற்றிய மருத்துவக் குறிப்புகள் உடைய புத்தகம்.
உடலில் எந்த உறுப்பும் தேவையில்லாமல் படைக்கப்படவில்லை. தொண்டையில் டான்சில் நீக்குவது, குடல் வால்வு நீக்குவது எல்லாம் முதன்மை முடிவாக இருக்கக்கூடாது என்று அறுதியிட்டு கூறுகிறது.
காது கேளாமைக்கு ஐந்து காரணங்களை கூறுகிறது. பிறவியிலேயே காது நரம்பில் பாதிப்பு இருந்தால் ‘காக்ளியர் இம்பிளாண்ட்’ பொருத்தலாம் என்கிறது. இது இயற்கையாகவே கேட்கும் திறன் போல அமைந்துவிடுமாம். காது கேளாமைக்கான காரணங்களும், பயன் தரும் மருந்து விபரமும் விவரிக்கப்பட்டுள்ளது. காது குத்துவதால் வரும் நோய் தொற்று பற்றியும் உரைக்கும் நுால்.
– சீத்தலைச் சாத்தன்