இஸ்லாமை இந்தியாவில் நிறுவக் காரணமாய் இருந்த க்வாஜா நாயகம் வாழ்வை விவரிக்கும் நுால். உலகெங்கும் உள்ள பக்தர்கள் இவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்துவது பற்றி எடுத்துரைக்கிறது.
ஈரான் நாட்டில் பிறந்த க்வாஜா, சிறு வயதிலே பிறர் துன்பம் துடைக்கும் நற்பண்பை கூறுகிறது. இளம் வயதில் பெற்றோரை இழந்து ஹாருனி என்ற ஞானியை குருவாக ஏற்று, 20 ஆண்டுகள் பயிற்சி பெற்றதை விவரிக்கிறது. பல நாடுகளுக்குச் சென்று, இறுதியாக இந்தியா வந்ததை தெளிவுபடுத்துகிறது.
ஆன்மிகப் பயணம் மேற்கொண்டு 700 குடும்பங்களை இஸ்லாம் மதத்துக்கு மாற்றியது குறித்த விபரம் உள்ளது. அவரது கடித இலக்கிய முக்கியத்துவம் மற்றும் வாழ்க்கை வரலாற்றை கூறும் நுால்.
– ஜி.ரா.,