பெண்ணியம், சாதி மறுப்பு, அரசியல் அவலம் குறித்த சிறுகதைகளின் தொகுப்பு நுால்.
பணி நிறைவுற்ற ஆசிரியர், பிறந்து வளர்ந்த கிராமத்திற்கு மீண்டும் செல்ல துாண்டும் பால்ய நினைவுகள் பற்றி பேசுகிறது. சாதி மறுப்பு மணம் புரிந்ததற்காக சொத்தில் பங்கு இல்லை என துரத்திவிட்ட அவலத்தை சொல்கிறது.
ஏழ்மை கண்டு ஏகடியம் பேசியவன் பின்னாளில் பட்ட பெருந்துயர், ஆசிரமத்தில் படித்து மருத்துவராகிய பெண், அக்காவையும், அக்கா மகளையும் சீரழித்த சமூகத்தின் மீது எழுந்த சீற்றம் என கதைகள் அமைந்துள்ளன. காதல் பிரிவின் பிதற்றல், ஒதுக்கப்பட்டவன் சமூகத்தில் தலை நிமிர்ந்த கம்பீரம் போன்ற கருத்துகளில் அமைந்த கதைகளின் தொகுப்பு நுால்.
– புலவர் சு.மதியழகன்