துப்பறியும் பாணியில் எழுதப்பட்ட நாவல். மணல் கொள்ளையை மையக்கருத்தாக்கி பேசு பொருளாக்கியுள்ளது.
மணல் திருடுபவரை எதிர்த்து சட்டம், நீதியை நிலைநாட்ட போரிடுகிறார் முற்போக்கு சிந்தனையுள்ள ஆசிரியர். எந்த தடயமும் இன்றி அவரை கொன்று உடல் மறைக்கப்படுகிறது. மூடப்பட்ட வழக்கை சட்ட மாணவன் துப்பறிந்து, ஆதாரங்களை திரட்டி குற்றவாளியை கண்டறிவதே கதையின் மையக்கரு.
சம்பவங்களை புலன் விசாரணை அதிகாரியின் அனுபவத்தோடு, குற்றத்தை நிரூபிக்கும் பாவனையில் தெளிவுபடுத்தி இருப்பது சிறப்பு. ஒவ்வொரு அத்தியாயமும் சுவாரசியமாக நீள்கிறது. சட்டத்தின் ஒவ்வொரு பிரிவையும் உரிய வகையில் எடுத்துக் காட்டிய விதமும் பாராட்டத்தக்கது. உண்மையும், கற்பனையும் கலந்து விரியும் நாவல் நுால்.
– ஊஞ்சல் பிரபு