திருப்பதி பிரம்மோற்சவ சிறப்பை விளக்கும் நுால். அனைத்து பக்தர்களும் படிக்க வேண்டிய தகவல்கள் நிறைந்துள்ளது.
பிரம்மோற்சவத்தின் முக்கியத்துவம், ஆன்மிக நுணுக்கங்களை அழகாக விவரிக்கிறது. வழிபாட்டிற்குரிய பல்வேறு முறைமைகள், நிகழ்வுகள் மற்றும் அதன் பின்னணியில் உள்ள புராணக் கதைகள் சிறப்பாக இடம் பெற்றுள்ளன.
ஒவ்வொரு நாளிலும் நடைபெறும் வாகன சேவை, உலா மற்றும் திருவிழாக்களின் விளக்கம் தரப்பட்டுள்ளது. ஆன்மிக ஆர்வலர்கள் மட்டுமின்றி, திருப்பதி பெருமாள் வரலாற்றையும், வழிபாட்டு முறையையும் அறிய விரும்பும் அனைவருக்கும் உதவும் வகையில் அமைந்துள்ளது. ஆன்மிக வழிகாட்டி நுால்.
– இளங்கோ