இறைவனை தரிசிக்க உதவும் நுால். ஆறு வித குணங்களாக பேராசை, சினம், கடும்பற்று, முறையற்ற பால் கவர்ச்சி, உயர்வு தாழ்வு மனப்பான்மை, வஞ்சம் பற்றி கூறுகிறது. பழவினை, புகுவினை, ஆகாம்ய கர்மம் விளக்கப்பட்டுள்ளது.
ஐம்புலன்களின் தலைவன் அய்யப்பன் என விளக்கம் தருகிறது. அதற்கு திருமூலர் பாடலை ஒப்பிட்டு கூறுகிறது. ஜீவாத்மா, பரமாத்மாவுக்கு உள்ள தொடர்பை, கண்ணதாசன் பாடல் வழி விளக்குகிறது. பரமாத்மாவை, ஜீவாத்மாவால் மட்டுமே உணர முடியும் என்கிறது.
அய்யப்பன் விரதம், பூஜை முறைகள் விளக்கப்பட்டுள்ளன. படிகள் விளக்கம், தத்துவம் படிக்கும் வகையில் உள்ளன. அய்யப்பன் காயத்ரி மந்திரமும் கூறப்பட்டுள்ளது. அனைவரும் படித்து மகிழ வேண்டிய ஆன்மிக நுால்.
– முனைவர் கலியன் சம்பத்து