அண்ணாமலை அரசரின் வாழ்க்கை வரலாற்று நுால். கிழக்கும் மேற்கும் கலந்த கர்மவீரர் எனவும், முற்கால வழக்கங்களும், இக்கால நாகரிகமும் தெரிந்தவர் எனவும் குறிப்பிடுகிறது.
அரசு சபையில் நவநாகரிக பொலிவுடன் விளங்கியதையும், வாணிகத் துறையில் காரியம் சாதித்ததையும் உரைக்கிறது. கோவில் பணிகளில் ஆத்மார்த்தமாய் ஈடுபட்டிருந்ததை அறியத் தருகிறது.
பள்ளி, கல்லுாரிகளுடன், பல்கலைக்கழகம் துவங்கி, தமிழ் சான்றோரை பேராசிரியர்களாக நியமித்த பெருந்தன்மை பற்றி பதிவு செய்துள்ளது. தமிழிசை சங்கம் நிறுவியது. இசை கல்லுாரியை துவங்கியது, தமிழாராய்ச்சிக் கழகத்தை நிறுவியது பற்றியுள்ளது. செட்டிநாட்டு அரசரின் சிறப்பை விளக்கும் அரிய நுால்.
– புலவர் சு.மதியழகன்