மனித உறவுகளின் பண்பாட்டை பிரதிபலிக்கும் சிறுகதை தொகுப்பு நுால்.
ஆதரவு இல்லாதோருக்கு உதவுவதை, ‘சன்மானம்’ கதை சித்தரிக்கிறது. மூன்று வயதில் தாயை இழந்தவருக்கு ஏற்படும் ஆசையை, ‘அம்மாவின் கதை’ பாச பிணைப்புடன் கூறுகிறது.
சிறுவயதில் நட்புள்ள ஐந்து பேர், திருமணத்துக்கு பின் சந்திக்க திட்டமிடுகின்றனர். அதில் ஏற்படும் இடர்ப்பாடு பற்றி, ‘மகாராஜா கதை’ சொல்கிறது. ஆதரவு தரும் மனித மனங்கள் குறித்து, ‘அடைக்கலம்’ கதை நெகிழ வைக்கிறது. தாக்கத்தை ஏற்படுத்தும் நுால்.
– டி.எஸ்.ராயன்