தாமரை நூலகம், 7,என்.ஜி.ஓ.காலனி, வடபழனி, சென்னை -26. (பக்கங்கள்-148)
சதுரகிரித் தலபுராணம் என்னும் பெயரிய இந்நூல், பாண்டிநாட்டிலுள்ள நாலு மாமலையில் அடியார்களுக்கு அருள் செய்யும் பொருட்டுச் சிவ பெருமான் சுந்தரலிங்கம், மகாலிங்கம், சந்தனலிங்கம், இரட்டைலிங்கம் என நான்கு திருமேனிகளைக் கொண்டு எழுந்தருளியிருக்கும் செய்தியைக் கூறுவதாகும். அன்றியும்,வெள்ளைப் பிள்ளையார், முருகக்கடவுள், ஆனந்த வல்லியம்மை முதலியோரது அரும் பெருஞ் சிறப்புகளை இதன் கண் அறியலாம். இதுவுமன்றிப் பதினெண் சித்தர்களின் வரலாறுகளையும், அவர்களால் செய்யப்பட்ட நூல்களையும், வைத்திய வாதயோக ஞானானுபவங்களையும், இந்நூல் நன்கு விளக்கும்.