ஸ்ரீ தரீய வியாக்யானத்தையும், ஆங்காங்கு வம்சீதரீய வியாக்யானத்தையும் தழுவி மூல சுலோகத்திலுள்ள ஒரு பதத்தைக் கூட விடாமல் எளிய நடையில் தமிழில் உரை எழுதப்பட்டிருக்கிறது. " கல் நெஞ்சையும் கரைத்து ஷ்ரீ கிருஷ்ண பக்தியிலீடும்படிச் செய்யக் கூடியது ஸ்ரீமத் பாகவதம் " என்ற புகழிற்கேற்ப இம் மொழிபெயர்ப்பும் அமைந்துள்ளதாகச் சொல்வது மிகையாகாது. மேலும் மூலத்தில் பதிந்திருக்கும் ஆழ்ந்த கருத்துக்கள் ஆங்காங்கு குறிப்புரைகளாலும் பிறவற்றாலும் விளக்கப்பட்டிருக்கின்றன. இம் முறையில் அமைந்துள்ளது என்பதை நாம் அதிகம் சொல்லத் தேவையில்லை. மேலும் கேரளத்தில் குருவாயூரென்ற திவ்ய ஷேத்திரத்தில் வசித்து வந்த ஸ்ரீ நாராயண பட்டர் என்ற மஹா கவியால் ஹமத் பாகவதார்த்தத்தைச் சுருக்கி தொடர்ச்சியாக இயற்றப்பட்ட " நாராயணீயம் " என்ற பகவத்ஸ்துதியும் தமிழில் பதவுரையுடன் ஒவ்வொரு அத்யாயத்தின் முடிவிலும் சேர்க்கப்பட்டிருக்கிறது மற்றொரு சிறப்பு அம்சமாகும்