நண்பர்கள் தோட்டம், 46, தெற்கு வீதி, ஜீவானந்தபுரம், புதுச்சேரி-605 008. (பக்கம்: 128).
கவிதை உலகில் மரபுக் கவிதை என்றும், புதுக் கவிதை என்றும் உலவி வரும் வகையில், இந்நூல் புதுக்கவிதையில் மணம் வீசுகிறது. இந்நூலில் உள்ள கருத்துக்கள் புரட்சியாகவும், புதுமையாகவும் உள்ளன."புது யுகம் படைக்கபுவியை நேசி
மக்களை நேசிகொடிய வாளை மறைத்து வை' (பக்.34) என்றும், "வானத்து வெளிச்சம், இறைவனின் விளக்கு' (பக்.49) என்றும், "அவன் இட்ட கட்டளை யாருக்குத் தெரியும், மலருக்குத் தெரியுமா? புயலின் கோபம் (பக்.58) என்றும்,
பசிப் பிணியற்ற உலகம் வேண்டும்வள்ளல்கள் பிறக்க வேண்டும்உலகு நலப்பட வேண்டும்புதிய உலகில் சாதி, மதம் வேண்டாம்கடவுள் போதும் கங்கையில் நீராட (பக்.118)என்றும் கவிஞர் பாடியுள்ளவை சிறந்த தத்துவக் கருத்துக்களாகும். கவிஞர்கள் படிக்க வேண்டிய நூல்.