சிபி கே.சாலமன்.உலக சுகாதார நிறுவனம்(WHO)மாணவர்களுக்கென வகுத்துத் தந்திருக்கும் பத்து அடிப்படை வாழ்வியல் பயிற்சிகளில் இது ஒன்று. சக மனிதனின் துணை இல்லாமல் நம்மால் எந்த வேலையையும் செய்ய முடியாது. மற்றவர்களின் உதவியைப் பெற்று,நாமும் அடுத்தவர்களுக்கு உதவும் அற்புதமான திறமையை மாணவப் பருவத்திலேயே வளர்த்துக் கொள்வது எப்படி என்பதை எடுத்துச் சொல்கிறது இந்நூல்.World Health Organisation (WHO)மாணவர்களுக்குப் புரிந்துரைக்கும் பத்து அடிப்படை வாழ்வியல் பயிற்சிகளில் Interpersonal Relationship ஒன்று.நமக்கு ஏற்படுகிற பல பிரச்னைகளுக்குக் காரணம்,மனித உறவுகளை நாம் சரியாகப் பேணக் கற்றுக் கொள்ளாதது தான்.நம்மைச் சுற்றி இருக்கும் மனிதர்களோடு எப்படி நல் உறவை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதை விளக்கமாகச் சொல்கிறது இந்நூல்.மனித உறவுகள் சுமூகமாக இருந்துவிட்டால் என்ன நன்மை?பள்ளியில் படிக்கும் மாணவனோடு சண்டை,அண்டை வீட்டாருடன் சண்டை,வீதியில் சண்டை,பொது இடத்தில் சண்டை,முட்டல் மோதல்கள் அனைத்தையும் தீர்த்து விடலாம்.உங்களைச் சுற்றி என்றென்றும் அமைதியான சூழல் இருக்குமாறு பார்த்துக் கொள்ளலாம். இன்றைய மாணவர்களின் எதிர்காலம் மகத் தானதாக அமைய இந்நூல் ஒரு தொடக்கப் புள்ளி.