ஆசிரியர்-ஆர்.பி.சாரதி.வெளியீடு:புரோடிஜி புக்ஸ் பதிப்பகம், நியூ ஹோரிசான் மீடியா பி.லிட்.,எண்.33/15, எல்டம்ஸ் ரோடு, ஆழ்வார்பேட்டை, சென்னை-600 018. பக்கங்கள்:80.தேசத் தந்தை மகாத்மா காந்தியின் நெகிழ்ச்சியூட்டும் வாழ்க்கை இது.தேசப்பற்று என்பது சட்டைக்கு மேல் குத்திக்கொள்ளும் கொடி அல்ல.நெஞ்சுக்குள்ளே பதியவேண்டிய கல்வெட்டு என்பதை அழுத்தம் திருத்தமாகப் புரிய வைக்கும். சுதந்தரத்துக்காப் போராடினார்.உண்ணா விரதம் இருந்தார்.உப்பு சத்தியாக்கிரகம் செய்தார்.இந்தியாவுக்குச் சுதந்தரம் பெற்றுக் கொடுத்தார். அவ்வளவு தானா? எத்தனை எத்தனை நெகிழ்வூட்டும் சம்பவங்கள்?எத்தனை எத்தனை போராட்டங்கள்?எத்தனை எத்தனை பாடங்கள் காந்தியின் வாழ்க்கையில்? அத்தனையும் இந்தப் புத்தகத்தில். ஒழுக்கம்,நீதி,நேர்மை போன்ற நல்ல பண்புகளை உங்கள் மனத்தில் விதைபோல் தூவி,உங்கள் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கப் போகும் நண்பன் இந்நூல்.