ஆசிரியர்-சிபி கே.சாலமன்.வெளியீடு:புரோடிஜி புக்ஸ் பதிப்பகம், நியூ ஹோரிசான் மீடியா பி.லிட்.,எண்.33/15, எல்டம்ஸ் ரோடு, ஆழ்வார்பேட்டை, சென்னை-600 018. பக்கங்கள்:80. உலக சுகாதார நிறுவனம் (WHO)மாணவர்களுக்கென வகுத்துத் தந்திருக்கும் பத்து அடிப்படை வாழ்வியல் பயிற்சிகளில் இது ஒன்று.மாணவப்பருவத்தில் வித்தியாசமாக,நூதனமாகச் சிந்திக்கப் பழகிக் கொண்டால் அது வாழ்நாள் முழுதும் நம் வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் உபயோகமாக இருக்கும்.எப்படி வித்தியாசமாகச் சிந்திப்பது?சொல்லித் தருகிறது இந்நூல்.World Health Organisation (WHO) மாணவர்களுக்குப் பரிந்துரைக்கும் பத்து அடிப்படை வாழ்வியல் பயிற்சிகளில் Creative Thinking ஒன்று.புதிதாக யோசிப்பது என்பது வேறு; மாற்றி யோசிப்பது வேறு. உங்கள் பிள்ளைகளுக்கு எதையும் மாற்றி யோசிக்கக் கற்றுத் தருகிறது இந்நூல்.ஏன் மாற்றி யோசிக்க வேண்டும்? போட்டிகள் நிறைந்த உலகில் அதுதான் வெற்றிக்கு இன்று அடிப்படைத் தேவை.பள்ளியில்,கல்லூரியில், நேர்முகத் தேர்வுகளில்,பொது இடங்களில்,மாபெரும் சபைகளில்-நமது வித்தியாசத் தன்மைதான் நமது விசிட்டிங் கார்டாக அமைகிறது. வெற்றிக்கு வழி வகுக்கிறது.இன்றைய மாணவர்களின் எதிர்காலம் மகத்தானதாக அமைய இந்நூல் ஒரு தொடக்கப்புள்ளி.