ஆசிரியர்-சிபி.கே.சாலமன்.வெளியீடு:புரோடிஜி புக்ஸ் பதிப்பகம், நியூ ஹோரிசான் மீடியா பி.லிட்.,எண்.33/15, எல்டம்ஸ் ரோடு, ஆழ்வார்பேட்டை, சென்னை-600 018. பக்கங்கள்:80.உலக சுகாதார நிறுவனம்(WHO)மாணவர்களுக்கென வகுத்துத் தந்திருக்கும் பத்து அடிப்படை வாழ்வியல் பயிற்சிகளில் இது ஒன்று.எத்தனையோ திறமைசாலிகள் முக்கியமான விஷயங்களில் முடிவெடுக்கத் தெரியாமல் தான் தோற்றுப் போயிருக்கிறார்கள். ஒரு விஷயத்தைச் செய்யலாமா,வேண்டாமா என்று முடிவெடுப்பது ஒரு கலை.மாணவர்கள் முடிவெடுக்கும் கலையைக் கற்றுக் கொள்வது அவர்களை வெகு உயரத்துக்குக் கொண்டு போகும். World Health Organisation (WHO)மாணவர்களுக்குப் பரிந்துரைக்கும் பத்து அடிப்படை வாழ்வியல் பயிற்சிகளில் முடிவெடுக்கும் திறனும் ஒன்று. நாம் சரியாக முடிவெடுக்கிறோமா? முக்கியமான பல விஷயங்களில் நாம் உணர்ச்சிகளுக்கு ஆட்பட்டுவிடுகிறோம். அல்லது மிகத் தாமதமாக முடிவெடுக்கிறோம். இவையெல்லாம் நமக்கு நாமே தோண்டிக் கொள்கிற குழிகள்.இன்றே, இங்கே, இப்போதே சரியான முடிவை எடுப்பதால் என்ன நன்மை? எதையும் எதிர்கொள்கிற துணிவு வரும்.எல்லாக் காரியங்களிலும் வெற்றி நம் வாசலில் வந்து நின்று கதவைத் தட்டிக் கொண்டே இருக்கும். இன்றைய மாணவர்களின் எதிர்காலம் மகத்தானதாக அமைய இந்நூல் ஒரு தொடக்கப்புள்ளி.