லஷ்மி விஸ்வநாதன். வெளியீடு: நியூ ஹாரிசன் மீடியா (பி) லிமிட், 33/15, எல்டாம்ஸ் சாலை, ஆழ்வார்பேட்டை, சென்னை-18. (பக்கம்:128.)
இந்நூலில் பெரும்பாலான அனைத்து இந்து உட்பிரிவினரும் வீடுகளில் செய்யும் பாரம்பரியமான சுமங்கலி பூஜை என்கிற மூதாதையர் வழிபாடு விளக்கப்பட்டுள்ளது. வழிபடும் முறைகள், சமையல், பின்பற்றக்கூடிய வழிமுறைகள் அவற்றில் முதல் நாளே செய்து கொள்ள கூடியவைகள் என தெளிவாக ஆராய்ந்து எழுதியிருப்பது ஆசிரியரின் சிறப்பு. வெளிநாடுகளில் வாழ்வோரும் கூட இந்நூல் உதவியால், வீட்டில் பெரியவர்கள் இருந்து சொல்லித் தந்தால் எவ்வாறு செய்வார்களோ, அவ்வாறு வழிபடலாம்.இது ஒரு பயனுள்ள, கலாசாரம் அழியாமல் காக்கும் முயற்சி. இவ்வகையில் திருமண சம்பிரதாயங்கள், வளைகாப்பு, சீமந்தம் போன்ற நிகழ்ச்சிகளுக்கும் வழிமுறைகளோடு நூல்கள் வந்தாலும் நன்மையே.