கலைவாணி பதிப்பகம், 103/2 (32) தாணாத்தெரு, சென்னை-600007. (பக்கம்: 32+192)
நூலாசிரியர் ஒரு கவிஞர் என்பதால், "இலக்கியத்தில் வேலையாள்' என்னும் தலைப்பில் தொடங்கி, தொழிலாளர் நலச்சட்டங்களைப் பற்றிய அறிமுகம் தந்து விரிவாக வேலையாட்கள் இழப்பீட்டுச் சட்டம் 1923 பற்றி எளிய நடையில் படைத்துள்ளார்."பணியாள்' என்பவர் யார்? அவர் பணியில் இருக்கும் போது ஏற்படும் விபத்துகள் எவ்வகையானவை? அவரது விபத்துக்கு ஏற்ப நஷ்டஈடு எவ்வளவு தருவது? "பணியாள்' பணியின் போது இறந்துவிட்டால் நிர்வாகம் என்ன செய்ய வேண்டும்? இழப்பீட்டுத் தொகையைப் பெறுவது எப்படி? நடைமுறைச் சிக்கல்கள் என்ன?
இப்படிப்பலதரப்பட்ட வினாக்களுக்குச் சட்ட ரீதியாக விடை கூறும் இந்நூல் பல பிரபலமான வழக்குகளும் ஆங்காங்கே கையாளப்பட்டுள்ளன."பணியாளர்கள்', "நிர்வாகத்தினர்', "வழக்கறிஞர்கள்', "சட்டம் பயிலும் மாணவர்கள்' என பலதரப்பட்ட பிரிவினர்களுக்கும் பயன் தரும் வகையில் சட்டங்கள், விதிகள் அனைத்தையும் நல்ல தமிழ் நடையில் மொழிமாற்றம் செய்துள்ளார் நூலாசிரியர்.அட்டவணை, படிவங்கள், கால முறை அறிக்கைகள் போன்றவை உடனடி சரிபார்ப்புக்குத் தேவையான அம்சங்கள். இத்தகைய மொழியாக்க சட்ட நூல்கள் வரவேற்கப்பட வேண்டியவையாகும்.