சோக்கோ அறக்கட்டளை, நீதிநாயகம் பகவதி பவன், 143, ஏரிக்கரை சாலை, கே.கே.நகர், மதுரை-625 020. (பக்.231.
கடன் என்று சொல்லப்படுவது துடைத்தெறியப்படும் வரை ஒரு நபர், தனது உழைப்பை மற்றொருவருக்கு வருடக் கணக்காகத் தர வேண்டும் என்பதற்காக இந்த முறையின் கீழ் கொத்தடிமையாக்கப்படுவது, நாம் கட்டுவதாக உறுதியளித்துள்ள புதிய சமத்துவ சமூகப் பொருளாதார அமைப்புக்கு முற்றிலும் ஏற்புடையதல்ல; இந்தக் கொத்தடிமை முறையானது அடிப்படையான மனித கண்ணியத்திற்கு இழுக்கு என்பது மட்டுமல்ல, அரசியல் சட்ட மாண்புகளை முற்றிலும் மீறுவதாகும் மற்றும் அருவருப்பூட்டுவதுமாகும்' பந்துவா முக்தி மோர்ச்சா வழக்கில் நீதிபதி பி.என்.பகவதி தெரிவித்த கருத்து இது.
ஒப்பந்தத் தொழிலாளர்களின் உரிமை, கட்டாயப்படுத்தப்பட்ட உழைப்பு, குறைந்தபட்ச ஊதியம், கொத்தடிமை ஒழிப்பில் சமூக செயல்பாட்டுக் குழுக்கள், கொத்தடிமைகள் மறுவாழ்வு, கொத்தடிமை
விடுவிப்பும் மறுவாழ்வும் இப்படியாக ஒன்பது தலைப்புகளில் பிரபலமான ஒன்பது முன்னோடி வழக்குகளையும், தீர்ப்புரைகளையும் தமிழில் புரியும் வகையில் மொழியாக்கம் செய்யப்பட்டு, முறையாகத் தொகுக்கப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யரின் அணிந்துரையும், தொகுப்பாசிரியரின் அணிந்துரையும் இந்நூலின் நோக்கத்தை இயம்புவதாய் உள்ளது. இத்தகைய முயற்சிகள் வரவேற்கப்பட வேண்டியவை. சோக்கோ அறக்கட்டளையின் சட்ட விழிப்புணர்வுப் பணியும், சமூகப் பொறுப்புணர்வும் பாராட்டுக்குரியன