வெளியீடு:சங்கர் பதிப்பகம்,21,டீச்சர்ஸ் கில்டு காலனி,2 து தெரு,இராஜாஜி நகர் விரிவு,வில்லிவாக்கம்,சென்னை-600 049. பக்கங்கள்:88.சித்தர் பெருமானுள் ஒருவராகிய கணபதிதாசர் தம் நெஞ்சறி விளக்கம் என்னும் இந்நூலில் நாம் கடைப்பிடிக்க வேண்டிய நல்லொழுக்கங்களைப் பட்டியலிட்டுச் சென்றுள்ளார்.மனசாட்சியின்படி நடப்பவனே நேர்மையாக வாழ முடியும்.எனவே இவர் தாம் கூறும் கருத்துகளை நம் மனச்சாட்சியான நெஞ்சை விளித்துக் கூறுகிறார்.நம் செயல்கள் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருப்பவன் நாகை நாதனாம் சிவபிரான்.அவனை மறவாது உள் நெஞ்சில் இருத்திக் கொண்டால் அவன் உன்னை நல்வழிப்படுத்துவான் என்கிறார்.இந்நூலின் நூற்பயனில் இந்நூலின் சிறப்பினை மிக எளிதாக விக்கமாகக் கூறியுள்ளார்.