ஸ்ரீ ஆனந்த நிலையம்,29/5, ரங்கநாதன் தெரு, தியாகராயர்நகர், சென்னை-600 017.
நமது பரத கண்டத்தில் புராண,இதிகாச காலந்தொட்டே சிறுவயது முதற்கொண்டு பல்வேறு நீதிக்கதை,வீரதீர சாகசக்கதை, பஞ்சதந்திர கதைகள் போன்ற பல கதைகளை எடுத்துக் கூறி வருவது வழக்கமாகும்.அவை வெறும் பொழுதுபோக்கிற்காக மட்டும் கூறப்பட்டதல்ல, அதன் மூலம் நன்னெறிகளை போதித்து நல்வழிபடுத்துதலே நோக்கமாயிருக்கிறது இன்றளவும்.அத்தகைய கதைகள் பல்லாயிரமாண்டுகளுக்கு முன்பே தோன்றியிருந்தாலும், இன்றளவும் நிலைத்து நிற்பதற்கு காரணம் யாதெனில் அதிலுள்ள காலத்தால் அழியாத சத்தான நற்கருத்துகளாகும்.அத்தகைய வரிசையில் இச்சிறிய படைப்பான விக்கிரமாதித்தன் பற்றிய கதையானது, இன்றும் மக்கள் மனதைவிட்டு நீங்காத ஒரு காவியம் என்றே கூறுமளவிற்கு அதில் படைக்கப்பட்ட அருமையான பாத்திரங்களே காரணம் எனலாம்.இக்கதையானது பல்வேறு வடிவங்களில் நூல்களாகவும், திரைப்படமாகவும், இன்னபிறவாகவும் வெளிவந்த போதிலும் இந்நூல் சற்றே வித்தியாசமாக படைக்கப்பட்டுள்ளது.