D.K.Printworld (P) Ltd., Sri Kunj F52, Bali Nagar, New Delhi 110 015.
தமிழகத்தில் கிடைத்துள்ள சமஸ்கிருத (வடமொழி) கல்வெட்டுகள் செப்பேடுகளில் காணப்படும் வரலாற்றுச் சான்றுகள் இந்நூலில் ஆராயப்பட்டுள்ளன. ஆசிரியரின் முந்தைய நூலின் பல்லவர், சோழர், பாண்டியர் ஆட்சி காலத்திய (கி.பி.1310 வரை) கல்வெட்டுகள் ஆராயப்பட்டுள்ளன. அதை தொடர்ந்து விஜயநகர், நாயகர், மராத்தியர் கால சாசனங்கள் இந்நூலில் ஆராயப்பட்டுள்ளன. நிர்வாகம், பொருளாதாரம், சமூக வாழ்க்கை, கல்வி, இலக்கியம், சமயம் போன்ற தலைப்புகளில் வழங்கப்பட்டுள்ளன. சமஸ்கிருதம் தமிழ் கலந்த மணி பிரவாளம் பாணியில் அமைந்த கல்வெட்டுகளும் உள்ளன. கிருஷ்ண தேவராயர், அச்சுதராயர் போன்ற அரசர்கள் ஆண்டபோது இருந்த பலம் பொருந்திய ஆட்சி பிற்காலத்தில் வலிவு இழந்து சிற்றரசர்கள் ஆங்காங்கே தலை தூக்கினர் என்பதை சாசனங்கள் மூலம் அறிகிறோம். மேலும், இந்நூலில் அரசுக் கோப்பைகளை தயாரித்த கவிஞர்களை பற்றி குறிப்புகள் கிடைத்துள்ளன. சுவைமிக்க பல செய்திகளை ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார். அணிந்துரை வழங்கிய கல்வெட்டு அறிஞர் டாக்டர் கே.பி.ரமேஷ் கூறியுள்ளபடி, சமஸ்கிருத மொழி எவ்வாறு இணைப்பு மொழியாக திகழ்ந்தது என்பதை அறிய இந்நூல் துணை செய்கிறது. நல்ல பல நிழற்படங்கள் சேர்ந்திருப்பது சிறப்பாக அமைந்துள்ளது.