முகப்பு » வரலாறு » THE SOUTH INDIAN REBELLIONS BEFORE AND AFTER 1800

THE SOUTH INDIAN REBELLIONS BEFORE AND AFTER 1800

விலைரூ.90

ஆசிரியர் : எஸ். கோபி கிருஷ்ணன்

வெளியீடு: பழனியப்பா பிரதர்ஸ்

பகுதி: வரலாறு

Rating

பிடித்தவை
Palaniappa Brothers, No.25, Peters Road, Chennai 600 014. (Pages: 128).


இந்தியத் திருநாட்டின், அதிலும் குறிப்பாக தென்னாட்டின் விடுதலை வேள்விக் களத்தில் நிகழ்ந்த பல, பலரும் அறியப்படாத செய்திகளை ஒன்பது வரலாற்று ஆய்வாளர்கள் பதிவு செய்து கொடுத்த ஆய்வுரைகளின் தொகுப்பே இந்நூல். பொதுவாக இந்தியத் திருநாட்டில் விடுதலைக்கு முதற்குரல் 1887ல் சிப்பாய்க் கலகத்தின் வழியாகத் தான் ஒலிக்கத் தொடங்கியது என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கின்றோம். ஆனால், அதற்கு முன்னரே அதாவது பதினெட்டாம் நூற்றாண்டிற்கு முன்னரேயே விடுதலை வேள்விக்கு தீ மூட்டப்பட்டு விட்டது என்பதை வரலாற்றுச் சரித்திரச் சான்றுகளோடு கருத்தரங்கம் கூட்டி விவாதித்து, ஒன்பது பேராசிரியர் பெருமக்களால் ராஜபாளைய ராஜா கல்லூரியில் வாசித்தளிக்கப்பட்ட ஆய்வு அறிக்கைகளின் ஒட்டு மொத்தமான தொகுப்பே இந்நூல். தமிழ்நாடு, மலபார், திருவனந்தபுரம், கர்நாடகா, ஆந்திரா போன்ற தென்னக மாநிலங்களில் 1800க்கு முன்னரே எவ்வாறு விடுதலைக்கு வித்திட்ட சரித்திர நாயகர்களின் வீர நிகழ்வுகளை எளிமையான ஆங்கிலத்தில் தந்துள்ளனர் கட்டுரை ஆசிரியர்கள்.தமிழ் நூல்களை மட்டும் பதிப்பித்து வருகின்ற தமிழகப் பதிப்பாளர்கள் மத்தியில் பழனியப்பா ஆங்கில நூலையும் அழகுற பதிப்பித்துத் தர முடியும் எனக் கூறி, இந்நூலை வாசகர்களுக்கு முதல் வரவாக தந்திருக்கிறது. சரித்திர ஆய்வாளர்களுக்கு இந்நூல் ஒரு வரலாற்று ஆவணம்.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us