வெளியீடு: சங்கர் பதிப்பகம், 21, டீச்சர்ஸ் கில்டு காலனி, இராஜாஜி நகர் விரிவு,வில்லிவாக்கம், சென்னை-600 049. பக்கங்கள்: 112. நம் முன்னோர்கள் நமக்குப் பல அரிய அறிவுரைகளை வழங்கிச் சென்றனர். அவைகளில் ஒளவையார் கூறிச் சென்ற ஆத்திசூடி முதலிடம் பெறுகிறது. இரண்டு மூன்று சொற்களில் இனிய எளிய நடையில் ஆத்திசூடியை அமைத்துள்ளார் ஓளவையார்.மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது என்பது போல ஒரே வரியில் இரண்டு மூன்று சொற்களால் அமைந்த ஆத்திசூடி கருத்தாழம் மிக்கது. நல்ல அறிவுரைகளை அனைவரும் எளிதில் அறியும் வண்ணம் அமைந்துள்ளது. அந்த அறிவுரைகள் குழந்தைகள் மனதில் ஆழமாகப் பதியவேண்டியது மிக அவசியம். எதையும் கதையோடு இணைத்துச் சொன்னால் அது மிக எளிதாக ஆழ்மனதில் பதியும். எனவே ஆத்திசூடி அறிவுரைகளை இனிய எளிய கதைகள் மூலம் இந்நூலில் விளக்கியுள்ளோம். மேலும் இதற்காகக் கையாண்ட கதைகள் போதிசத்துவர் கதைகள், டால்ஸ்டாய் கதைகள், பஞ்சதந்திர நீதிக் கதைகள், ஈசாப் நீதிக்கதைகள், மகாபாரதம் போன்ற சிறந்த நூல்களிலிருந்து தேர்ந்தெடுத்துள்ளோம்.