சித்திரம், புதுச்சேரி-605 008. (பக்கம்: 96. விலை: ).
"சங்க இலக்கியங்களில் தொன்மச் சிக்கல்கள்" எனத் துவங்கி, "மக்களுக்கான அறிவியல் தமிழ்" என எட்டு ஆய்வுக் கட்டுரைகளை இந்நூலில் பதிவு செய்துள்ளார்."காப்பியம் என்பது இனிய தமிழ்ச்சொல். ஆனால், சில கூட்டத்தார் வடமொழியின் காவ்யம் என்பதே தமிழில் காப்பியம், காவியம் என வழங்கப் பெற்றது எனக் கூறுவர். இது தவறு." (பக்.26)
"அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியால் ஊடகங்கள் பெற்றுள்ள வளர்ச்சி பார்வையாளர்களின் அவசர அசைவுகள், நடத்துபவரின் தயக்கங்கள் போன்ற பற்பல கூறுகளால் தமிழ் மேடை நாடகங்கள் நீர்த்துப் போயின." (பக்.60).
எனப் பல புதுமையான ஆய்வுக்குரிய, யதார்த்தப் பார்வையோடு முயன்று ஆய்ந்து பதிவு செய்துள்ள கட்டுரைகள் அனைத்துமே இன்றைய இலக்கிய ஆர்வலர்களுக்குப் பெரிதும் துணை நிற்கும்.மரபு மீறாத - தமிழர் பண்பாடு சிதையாது பதியப் பட்டிருக்கின்ற தொன்மைக் கூறுகளோடு, இன்றைய நாள் அறிவியல் தாக்கத்தையும் சேர்த்து ஒரு புதிய தாக்கத்தை, எழுச்சியை, புத்துணர்வை அறிவு சார்ந்த வகையில் உருவாக்கிட, இன்றைய இளைய தலைமுறையினருக்கு அவரது அழைப்பு நியாயமானதே.