தமிழில் ஜ.ஆர்.ராதாகிருஷ்ணன்; கண்ணதாசன் பதிப்பகம், 23, கண்ணதாசன் சாலை, தி.நகர், சென்னை-600 017. தொலைப்பேசி : 24332682, 24338712.
உலகத்தில் அநேகமாக ஒருவர்கூட நீஙகலாக இல்லாமல் எல்லாருமே திருமணம் செய்கிறார்கள். உங்கள் பாட்டானாரும் பாட்டியும் திருமணம் செய்து கொண்டார்கள். உங்கள் தாயும் தந்தையும் திருமணம் செய்து கொண்டார்கள். நீங்களும் உங்கள் மனைவியும் திருமணம் செய்து கொண்டீர்கள். உரிய காலத்தில் உங்கள் குழந்தைகளும் உங்களைத்தான் பின்பற்றப்போகிறார்கள்- திருமணம் செய்து கொண்டு என்றென்றும் சந்தோஷமாக வாழப் போகிறார்கள். திருமணத்தைப் பற்றி நீங்கள் மேலெழுந்தவாரியாக தெரிந்து கொண்டதைவிட ஆழமாக எத்தனை எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன என்பதைத்தான் இந்த அருமையான புத்தகம் சொல்கிறது. வழக்கம்போல இந்தப் புத்தகத்தை எழுதுவதற்கு கையாண்ட ஆசிரியரின் அணுகுமுறை, முழுமைக்கும், முறையான தொகுப்புகளுக்கும் முற்றிலும் அனுபவபூர்வமானவை என்பதையும் காண்பிக்கிறது. கிருஹஸ்த ஆஸ்ரமத்திற்கு இந்து மதம் கொடுக்கும் முக்கியத்துவத்தை ஆழமாக சித்தரிக்கிறது. திருமணத்திற்குப் பின்னணியாக இருக்க வேண்டிய தார்மீக அணுகுமுறையை அவர் நமக்கு எடுத்துக் காட்டுகிறார்.. எப்படி தன்னைத் தானே உணரக்கூடிய வெகு உயர்ந்த நிலையை நாம் அடைய முடியும் என்பதைக் காட்டுகிறார். அதை மனைவியோடு இணைந்து எப்படி பெற முடியும் என்பதை விளக்குகிறார். அன்றாட வாழ்க்கைச் சூழல்களையும் அவர் விளக்குகிறார். இந்தப் புத்தகத்தில் தார்மீகக் கட்டளைகளாகக் கூறப்பட்டிருக்கும் பத்து வழிகளைப் படியுங்கள். அவையெல்லாம் ஆசிரியரின் அனுபவ சாத்தியமான யோசனைகளும், அறிவுரைகளுமாகும். அவற்றை பின்பற்றினால் வெற்றி நிச்சயம் உண்டு.