நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை கொண்டாடப்படும் உற்சாக விளையாட்டுத் திருவிழாவான ஒலிம்பிக்கின் வியப்பூட்டும் வரலாறு. எப்போது ஆரம்பமானது டந்த ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி? எத்தனை விதமான விளையாட்டுகள் இதில் விளையாடப்படுகின்றன? எத்தனை வகை ஒலிம்பிக்குகள் இருக்கின்றன? இதுவரை ஒலிம்பிக் போட்டிகளில் அதிக பதக்கங்களைக் குவித்த நாடு எது? மயிர்க்கூச்செரியச் செய்யும் சாதனைகளை அசாத்தியமாக நிகழ்த்தியுள்ள வீரர்கள் யார் யார்? கார் ரேஸ்போல, தேர் ரேஸ் எல்லாம் இருந்த ஆதிகால ஒலிம்பிக் முதல் சகல வசதிகளுடன் நடத்தப்படும் தற்கால ஒலிம்பிக் வரையிலான அனைத்து விஷயங்களையும் அழகாகத் தொகுத்துச் சொல்கிறது இந்தப் புத்தகம். வெளியீடு: புரோடிஜி பதிப்பகம், நியூ ஹரிசோன் மீடியா பி.லிட்., எண்.33/15, ஆல்டம்ஸ் ரோடு, ஆழ்வார்பேட்டை ,சென்னை-18.