கலைக்கோ, 3/40-ஏ, 13வது தெரு, ராம் நகர் தெற்கு, மடிப்பாக்கம், சென்னை-91. (பக்கம்: 406).
`இது தான் வள்ளுவம்' என்று இந்த ஆய்வு நூலாசிரியர் அவரது விரிவான ஆய்வு வலைக்குள் வள்ளுவரைப் பிடித்து வந்து காட்டுகிறார். இவரது ஆய்வு முடிவுகள் மறு ஆய்வு செய்யுமளவு விரிந்து நிற்பவை. வள்ளுவரின் கடவுள் கொள்கை, உயிர்க் கொள்கை, வாழ்வின் பயன், துறவற மறுப்பு, பெண்ணிய மறுப்பு, கூட்டுக் குடும்பம், கொல்லாமை, வாய்மை, ஊழ்வினை ஆகிய பலரும் அறிந்த திருக்குறள் தலைப்புகளில் புகுந்து விளையாடி, புதுப்புது செய்திகளைக் கொண்டு வந்து நிறுத்துகிறார். சங்க இலக்கியங்களைத் தன் வாதத் திறமைக்குச் சாட்சி சொல்ல வைக்கிறார். தொல்காப்பிய இலக்கணத்தையும் அங்கங்கே நிற்க வைத்துப் பேச வைக்கிறார். இந்நூலின் மதிப்புரையில், தமிழண்ணல் கூறியுள்ளது இவ்வாய்வு நூலில் ஏற்கக்கூடிய முடிவுகளும் உள, ஏற்க இயலாதெனவும் உள, மேல் ஆராய்ச்சிக்கு வழிவகுப்பனவும் உள.