விகடன் பிரசுரம், சென்னை. 600002. (பக்கம்: 225 )
சிறந்த சமையல் படைப்புகளுக்கான பல பரிசுகளைப் பெற்றவர் சாந்தி கிருஷ்ணன். அதில் `ஆவின்' நிறுவனப்பரிசும் அடங்கும். கணவர் பாரத ஸ்டேட் வங்கியில் தலைமை மேலாளர், கவிஞர், செய்தி வாசிப்பாளர் என்று பன்முகப் பரிமாணம் கொண்டவர். வெறும் 30 வகைச் சமையல் மட்டும் அல்ல, சிப்ஸ், தொக்கு, கூட்டு, ரசம், தோசை , வாழை என்று வகைக்கு விதவிதமான 30 தயாரிப்புகள். அதில், அழகான படங்கள் என்று அசத்தியிருக்கிறார். எளிய கைப்பக்குவம் இதன் சிறப்பு. இவர் செய் முறையில், வேப்பம்பூ ரசம் கூட கசக்காது. கோவில் தோசை மெத்தென்று சாப்பிட வேண்டு மா? பக்கம் 144 ஐ புரட்டுங்கள். இந்த தயாரிப்புகளில் உள்ள விசேஷம் , எல்லா வீடுகளிலும் அதிக முயற்சியின்றி சமையலறையில் இருக்கும் பதார்த்தங்களை வைத்து செய்து உண்ண முடியும். சுவையில் அருமையானவை, வெரைட்டியும் உண்டு. ரகளையான ருசியின் அடையாளம் என்று புத்தகத் துவக்கத்தில் கூறப்பட்டிருக்கும் தகவல் முற்றிலும் பொருத்தமானது. வித்தியாசமான சமையல் நூல். விகடன் பிரசுரத்தின் நேர்த்தியான தயாரிப்பு மேலும் சிறப்பம்சம்.