வித்யா பதிப்பகம், 15, முதல் மெயின் ரோடு, பொன்மேனி ஜெய்நகர், மதுரை- 625 010. (பக்கம்: 105.)
பாரதியாரின் கவிதைகள், கதைகள், கட்டுரைகள், பத்திரிகைகள் என்பவற்றில் அவர் குறிப்பிடும் உலக நிகழ்வுகளின் வரலாற்றுப் பின்னணிகள் விளக்கப்பட்டுள் ளன.
மாஜினி சபதம் நாட்டு விடுதலைக்கு இந்தியர் எடுக்க பாரதி விரும்பிய சபதமாகப் பேசப்படுகிறது. பெல்ஜியத்துக்கு வாழ்த்து, புதிய ருஷியா, பீஜித் தீவு பற்றிய "கரும்புத் தோட்டத்திலே' ஜப்பான் பற்றிய கட்டுரை, தென்னாப்ரிக்காவில் உள்ள நம்மவர், முதல் உலகப் போர் பற்றிய பதிவுகள், ஜப்பான், சீனா பற்றிய பதிவுகள் பாரதிக்கு உள்ள பல வெளிகளுள் அவர் ஒரு வரலாற்றாளர் என்னும் வெளியைக் காட்டியுள்ளார் நூலாசிரியர்.
தன் துறை சார்ந்த அறிவுத் திறனோடு, சான்றுகள் சேகரிப்பதிலும் மிகுந்த அக்கறை காட்டியுள்ளதை நூல் காட்டுகிறது. பாரதியின் கவிதை அடிகளிலும் ஆசிரியரின் விளக்க உரைநடையிலும் ஆங்காங்கு காணப்படும் மிகச் சில முக்கிய எழுத்துப் பிழைகள் அடுத்த பதிப்பில் திருத்தப்பட வேண்டியவை.