மணிமேகலைப் பிரசுரம், 7, தணிகாசலம் தெரு, தி.நகர், சென்னை- 17. (பக்கம்: 256.)
""வாழ்க்கை என்பது இறைவன் நமக்கு வழங்கியிருக்கும் வரம். வாழ்ந்து பார்ப்பது என்பது நாம் செல்கின்ற பாதை. அந்தப் பாதை, பண்பாடு தவறாததாக இருந்தால் தான் நமது சந்ததிகளின் வாழ்க்கை மேன்மைப்படும்'' என்று முன்னுரையில் ஆசிரியர் பேசுகிறார்.
முப்பத்தொன்பது கதைகள் உள்ள, இந்தத் தொகுதியில் பல சிறந்த கதைகளும் சில "சுமார்' - ரகக் கதைகளும் உள்ளன.
"சுமார்' கதைகளாக, அவை ஆகிப் போன காரணம் குறுக்கப்பட்டுள்ளதால் தான்!
ஒரு பக்கக் கதை, அரை பக்கக் கதை, தபால் கார்டு கதை என்றெல்லாம் கதைகளைக் குறுக்குவது பெண் சிசுக் கொலைக்குச் சமம். அந்த நாள் பாகவதர்கள், விஸ்தாரமாக ராக ஆலாபனை செய்வது போல் கதைகள் எழுதப்பட வேண்டும்