முகப்பு » கட்டுரைகள் » கல்வெட்டுக்களில்

கல்வெட்டுக்களில் கன்னித்தமிழ்

விலைரூ.25

ஆசிரியர் : கவிக்கோ ஞானச் செல்வன்

வெளியீடு: தென்றல் நிலையம்

பகுதி: கட்டுரைகள்

Rating

பிடித்தவை
தென்றல் நிலையம், 12-பி, மேல சன்னதி, சிதம்பரம்-608 001. (பக்கம்: 96.)

பல்வேறு காலக் கட்டங்களில் எழுதப்பட்ட 16 கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். இன்றைக்கும் சிந்திக்கப்பட வேண்டிய செய்திகள் இக்கட்டுரைகளில் அடக்கம்.
கல்வெட்டுக்களில் காணப்படும் அருந்தமிழ்ச் சொற்களை ஒரு கட்டுரையில் எடுத்துக் காட்டியுள்ளார்.
`ரிப்பேர் செய்தல்' என்று இப்போதும் நாம் சொல்லுவதை `புதுக்குதல்' எனக் கல்வெட்டுக் குறிக்கிறது. `பணிமகன்' எனும் சொல் `சர்வென்ட்' இன்று நாம் சொல்வதைக் குறிக்கிறது. இப்படிப் பல.
`வாலி வதம்' பற்றிய விமர்சனமாகப் பேராசிரியர் எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய நூலின் ஆய்வும், ராமன், சீதை பற்றிய ஆய்வுச் செய்திகளும் இந்நாளிலும் பேசப்படுவன. உலகம் எனும் சொல் பற்றிய ஆய்வும், `வெற்றியின் ரகசியம்' பற்றிய கருத்தும் படித்து இன்புறத்தக்கன.
ஆன்மிகம், இலக்கியம், வாழ்வியல், மொழி ஆய்வு எனப் பலதரப்பட்ட கட்டுரைகள் எளிய இனிய தமிழில் எவரும் படித்து
மகிழவும், பயன் பெறவும் தக்கவாறு எழுதப்பட்டுள்ளன.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us