நூலாசிரியர்: பால் ஜெ. பால் கெட்டி, தமிழாக்கம்: டி.வெங்கடகிருஷ்ணன், வெளியீடு:கண்ணதாசன் பதிப்பகம்,23 கண்ணதாசன் சாலை, தி.நகர், சென்னை- 17. (பக்கம்:216)
வெற்றி உங்களுடையதே அதை அடையும் வழியை ஜெ.பால் கெட்டி எளிமையாய்,உதாரணங்களுடன் பல வாழ்க்கை நிகழ்வுகளின் துணை கொண்டு அவருடைய விலைமதிப்பில்லாத அனுபவங்களின் பாடமாய் விளக்குகிறார்.பெரும் கோடீஸ்வரரான பால் கெட்டி தொழில் முனைவர்கள் பிறப்பதில்லை,உருவாக்கப்படுகிறார்கள் என்று காட்டுகிறார்.
அந்த முயற்சியில் ஏற்படும் தடைகளையும் கிடைக்கும் வாய்ப்புகளையும் பற்றி அலசுகிறார்.சொந்த தொழில் முயற்சியில் இறங்க போகும் அவர்களுக்கும், ஆர்வமான துடிப்பு நிறைந்த உச்சத்தை எட்ட துடிக்கும் ஊழியர்களுக்கும் அவர்களின் திறமையை வளம் பெற செய்ய நினைக்கும் நிறுவனங்களுக்குமான சீரிய அறிவுரை இந்நூல்.