திரு பதிப்பகம், 5 ஏ போயஸ் சாலை எல்டாம்ஸ் சாலை, சென்னை- 18. (பக்கம்:144)
வீரமிகு பெண்ணுக்கு வடக்கே உள்ள ஜான்சி ராணியைச் சொல்வர். தெற்கே இங்கே வீரமங்கை வேலு நாச்சியாரும் உள்ளார் என்ற வரலாற்று உண்மையை, புதின எழுத்தாளர் ஜீவபாரதி சிறப்பாக நெடுங்கதை ஆக்கியுள்ளார்.பெண்களின் வீரத்தையும், தியாகத்தையும், விவேகத்தையும் இந்த நூலாசிரியர் கீதா அங்கங்கே அளந்து காட்டி-யுள்ளார்.
ஜான்சி ராணிக்கு 77 ஆண்டு முற்பட்டவர் வேலு நாச்சியார். வெள்ளையரை எதிர்த்து தனது கணவர் சிவகங்கை சீமையின் அரசர் முத்து வடுகநாதரைப் பலிகொடுத்து, 8 ஆண்டு தவமிருந்து, ஹைதர் அலி உதவியுடன் வெள்ளையரை விரட்டி, இழந்த நாட்டை மீட்டவர் வேலு நாச்சியார்.
இவர், 1762ம் ஆண்டில் ஆங்கிலேய அதிகாரியிடம் வரி கொடுக்க முடியாது என்று வீராவேசமுடன் ஆங்கிலத்தில் கூறி விரட்டுகிறார். தெலுங்கு, மலையாளம், உருதுவும் பேசத் தெரிந்தவர் வேலு நாச்சியார்.
"என் உயிர் உள்ளவரை சாதியின் பெயரால் ஒரு சொட்டு ரத்தம் கூட, மண்ணில் சிந்தவிடமாட்டேன். மதம் சாதியை விட மனிதம் மகத்தானது, மனிதர்களை நேசிப்போம்' என்பது போன்ற வீரவரிகள் நம்மை வியக்க வைக்கும் சிறந்த திறனாய்வு நூல்.