நடேசன் சாரிட்டீஸ், 12, பிருந்தாவன் அவென்யு, தாம்பரம், சென்னை- 45. (பக்கம்:206)
சமச்சீர் கல்வித் திட்டம், அதை எதிர்த்திடும் சக்திகள், தற்போதைய பள்ளிகளில் நிர்வாகச் சீர்கேடுகள், கல்வியின் தரம், ஆசிரியர்களது செயல்பாடுகள் அவர் தம் அவல நிலைகள், பள்ளிகளில் பாலியல் கல்வி தேவையா? உயிர்த்துடிப்பான இவ்விஷயங்கள் பற்றிய, ஆய்வு நோக்கில் கண்டறியப்பட்ட தகவல்களின் தொகுப்பே இந்நூல். நூலாசிரியர், பொதுநிர்வாகம், சட்டம், சமூக சிந்தனையாளர், கல்வியாளர், எழுத்தாளர் போன்ற பன்முகப் பரிமாணம் வாய்க்கப் பெற்றவர் என்பதும் எழுத்தில் தெரிகிறது.
"வந்தே மாதரம்' பாடல் பற்றிய வரலாற்று நிகழ்வு இளைஞர்களுக்கெல்லாம் நாட்டுப் பற்றினை மேம்படுத்துவது திண்ணம். காஞ்சி மாமுனிவர் பனிரெண்டு வயது மாடு மேய்க்கும் சிறுவனுக்கு மோட்சம் அருளிய வர்ணனை, கண்களைக் குளமாக்கி விடுகிறது!
கல்வித் துறையுடன் பிணைக்கப்பட்டுள்ள அனைவருக்கும் உறுதுணை இந்நூல்...
நூலகங்களில் இடம் பெற வேண்டிய நல்ல நூல்.