பாவை பப்ளிகேஷன்ஸ், ராயப்பேட்டை, சென்னை- 14. (பக்கம்: 124)
சொல்லின் செல்வர் டாக்டர் ரா.பி.சேதுப்பிள்ளை நாடறிந்த சொல்லேர் உழவர் - நாவுக்கரசர். சொல்லாடுவதைப் போன்றே இவரது எழுத்திலும் செந்தமிழ் கொஞ்சி விளையாடும்.
கலையும், கற்பனையும் எனத் துவங்கி, தமிழ் இலக்கியத்திற்கண்ட கடவுள் என இருபது தலைப்புகளில், சென்னை மற்றும் திருச்சிராப்பள்ளி வானொலி நிலையங்களில் பேராசிரியர் ஆற்றிய தமிழ்ப் பொழிவினை புத்தக வடிவில் தந்துள்ளனர் பதிப்பகத்தார்.
எத்தனை முறை படித்தாலும் நா மணக்கும்; சிந்தை குளிரும்; புலமை மேலோங்கும். ஒவ்வோர் தமிழனும் படித்து இன்புற வேண்டிய காலப் பெட்டகம்.