விகடன் பிரசுரம், 757, அண்ணா சாலை, சென்னை-2. (பக்கம்: 96).
சுட்டிகள் மட்டுமின்றி பெரியவர்களும் ஆச்சரியப்படும் விதமாக இந்த புத்தகத்தில் பல பிரமாண்டங்கள் நிறைந்திருக்கின்றன. அதாவது பிரின்டிங் தொழில்நுட்பத்திலும், 3டியிலும் இது தான் அசத்தலான முதல் முயற்சி என்றே சொல்லலாம். மேஜிக் கண்ணாடியை அணிந்து கொண்டு அப்படியே பார்த்தால் ஒரு உருவமும், வலது கண்ணை மட்டும் மூடியபடி பார்த்தால் முற்றிலும் வேறு மாதிரியான உருவமும் தெரிகிற டெக்னாலஜி. சுட்டி 3டி இதழ்களில் வெளிவந்த மேஜிக் படங்களின் தொகுப்பு தான் "3டி கொண்டாட்டம்' புத்தகமாக வெளிவந்திருக்கிறது. இப்புத்தகம் உங்கள் வீட்டு குழந்தைகளை நிச்சயம் பரவசத்தில் ஆழ்த்தும்.