சுரா பதிப்பகம், 1620 "ஜே' பிளாக், 16வது பிரதான சாலை, அண்ணா நகர், சென்னை-600 040. (பக்கம்: 152.)
"சர்வதேச அளவில் குற்றங்களை எதிர்கொள்தல்' என்ற மையக் கருத்தை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்பட்ட ஆளுமைத் திறன் பயிற்சிக்கு அமெரிக்க அரசால் தெரிவு செய்யப்பட்ட போலீஸ் அதிகாரியான இந்நூல் ஆசிரியர், தன் அமெரிக்க அனுபவங்கள் பற்றி இந்நூல் மூலம் பகிர்ந்து கொள்கிறார். அமெரிக்கா தனி மனித சுதந்திரத்திற்கே அதிக முக்கியத்துவம் தரும் நாடு. பயங்கர அதிநவீன ஆயுதங்களைக் கூட தனியார் நிறுவனமே அங்கே தயாரிக்கின்றன! அமெரிக்க நாணயமான டாலரைக் கூட தனியார் கம்பெனி தான் அங்கே அச்சடிக்கிறது. அமெரிக்காவில் சிறிதும் பெரிதுமாய் 19,820 விமான நிலையங்கள் உள்ளன. இந்தியாவில் மொத்தம் 125 விமான நிலையங்கள்தாம்! இப்படிப் பல சுவையான செய்தித் துணுக்குகளுடன் மிக சுவாரஸ்யமாக நூலை எழுதியிருக்கிறார் ஆசிரியர். பலரும் படித்து இன்புறலாம்.