(தேவநாகரி எழுத்தில் மூலமும் தமிழுரையும்) இரும்புக் கடலையை வறுத்ததைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இதோ கேளுங்கள். அதுதான் ப்ரம்ம சூத்திர சங்கர பாஷ்யத்தின் விரிவுரை.1931ஆம் ஆண்டு முதல் முதலில் முதற்பதிப்பாக வெளிவந்ததது. பலரின் பாராட்டுக்களையும் நன்மதிப்பையும் பெற்ற அருமையான இந்தக் கிரந்தம் மறு பதிப்பாக ஆன்மீக மக்களையும் ஆராய்ச்சியாளர்களையும் மகிழ்விக்கும் நிலையில் 64 ஆண்டுகளுக்குப்பின் 3 வால்யூம்களாக வெளிவந்துள்ளது.கடலங்கடி பெரியவரால் முதல் முதலில் எளிய நடையில் தேவநாகரி மூலத்துடனும், தமிழ் மொழி பெயர்ப்புடனும் வெளியிடப்பட்ட இந்த நூல் பலரின் வேண்டுகோளுக்கிணங்க மறுபதிப்பாக வெளிவந்துள்ளது. ஒவ்வொரு சூத்திரமும் தமிழ் மொழியில் அச்சிடப்பட்டிருக்கிறது. பாமதி, கல்பதரு, பரிமளம், ப்ரம்ஹவித்யாபரணம், ராமநந்தீயம், நியாயரக்ஷாமணி முதலிய வியாக்கியானங்களை யொட்டி ஆங்காங்கு குறிப்பெழுதி விளக்கப்பட்டுள்ளது. மேலும் அத்வைதஸித்தாந்தத்தை யொட்டி சூத்திரார்த்தங்களை தெளிவாய் விளக்கி ஒவ்வொரு அதிகரணத்திலும் வித்தியாரண்ணிய சுவாமிகளால் இயற்றப்பட்ட வையாஷக நியாயாமாலையை எழுதி அதற்கும் கருத்துரை எழுதியும் வெளியிட்டுள்ளார்.