தமிழில் கவிஞர் புவியரசு. கண்ணதாசன் பதிப்பகம், 23, கண்ணதாசன் சாலை, தி.நகர், சென்னை-600 017. தொலைப்பேசி : 24332682, 24338712.
சாத்தானும் பைபிளை மேற்கோள் காட்டக்கூடும் என்பது ஓர் ஆங்கிலப் பழமொழி. ஜிப்ரானின் இலக்கிய உலகில் சாத்தான் மகாஞானம் பேசுகிறது. அந்த ஞானம், மகான்களின் ஞானங்களையெல்லாம் விழுங்கி சீரணித்து விடுகிறது. பைபிளுக்குப் பேருரை விளக்கம் அளிக்கிறது. மத விருட்சத்தின் ஆணி வேரை அசைத்துப் பார்க்கிறது. கடவுளின் மீது புதிய வெளிச்சம் வீசுகிறது. சாத்தானின் ஞான உரை கேட்டு, அஞ்ஞான இருளிலிருந்து அறிவு வெளிச்சத்தில் பிரவேசிக்கும் பாதிரியார் திகைப்படைந்தது போலவே, நாமும் பிரமித்துப் போகிறோம். வேலிப் பூக்கள் வேதாந்தம் பேசுகின்றன; சொத்தைப் பல் அரசியல் ஞானம் பேசுகிறது; பேய் பிசாசு பூதங்கள் பேரறிவில் தீப்பந்தம் ஏந்தி வந்து நம்மைத் திகைக்க வைக்கின்றன.