கண்ணதாசன் பதிப்பகம், 23, கண்ணதாசன் சாலை, தி.நகர், சென்னை-600 017. தொலைப்பேசி : 24332682, 24338712.
ஒவ்வொரு நாளும் பரிச்னைகள் உள்ளன. அவரவர் கடமையைப் பதற்றம் இல்லாமல் செய்து அமைதியாக வாழவும் வாய்ப்புகள் உள்ளன. எல்லாப் பிரச்னைகளையும் தீர்த்த பிறகுதான் மகிழ்ச்சி கிடைக்கும் என்பதல்ல. அவை எல்லாம் எப்போது தீர்ந்து மகிழ்ச்சியாக வாழ்வது? எனவே தினமும் மகிழ்ச்சியாக வாழ நமது மனதையும் உடம்பையும் நாம் தயார்படுத்த வேண்டும். மகிழ்ச்சியாக வாழ்ந்தால் மன அமைதி கிடைத்து தன்னம்பிக்கையுடன் சிந்தித்து செயல்படும், செயலாற்றல் கொண்ட மனிதனாகவும் தினமும் வாழலாம். சிறுசிறு வெற்றிகளும், கடமையை முழுமையான ஈடுபாட்டுடன் செய்து முடித்தலும் நமக்கு மகிழ்ச்சியைத் தந்து தைரியமாகச் சிந்திக்கவும் பழக்கப்படுத்தி விடும். ஆயிரம் வி.ஐ.பிக்களை பேட்டி கண்ட ஒரு பெண்மணி, நான் தினமும் ஒரு மணி நேரம் தியானம், யோகம் செய்கிறேன் என்று சொல்லவில்லை. மாறாக எப்போதும் மனதை டென்ஷனாகாமல் வைத்துக்கொள்கிறேன் என்கிறார். தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களின் மகளிர் சுய உதவிக்குழுவின் தலைவியாக உள்ள படிக்த் தெரியாத சின்னப்பிள்ளையிடமும் இதயத்தை திறந்த வைத்து வாழும் குணம்தான் இருந்தது. இதனால் நேர்மையாக முயற்சி செய்து சிறந்த கிராமத்து சமூக சேவகி என்ற விருதை பிரதமர் வாஜ்பாயிடம் பெறும் அளவுக்கு வாழ்வில் உயர்ந்தார். இவரது எளிமையான தோற்றத்தைக் கண்டு அசந்த வாஜ்பாய் இவரின் கால்களைத் தொட்டு ஆசீர்வாதம் பெற்றார். காரணம், அறிவின் துணையால் முயற்சி செய்து வெற்றி பெற்றுக் காட்டினாரே அதற்காகத்தான் வாஜ்பாய் இவரிடம் ஆசீர்வாதம் பெற்றார்.