கண்ணதாசன் பதிப்பகம், 23, கண்ணதாசன் சாலை, தி.நகர், சென்னை-600 017. தொலைப்பேசி : 24332682, 24338712.
குறிக்கோள் என்பது ஓர் இலக்கு. ஓர் இலக்கை அடைய ஓர் ஏவுகணையை நாம் ஏவுகிறோம்.ஏவுவதற்கு முன், தாக்க வேண்டிய இலக்கு எங்கே இருக்கிறது? தூரம் என்ன? எவ்வளவு வேகம்? எத்தனை நேரத்திற்குள் சென்று அடைய வேண்டும் என்ற கட்டளைகள் அதனுள் இருக்கும் மைக்ரோ கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்படுகின்றன. உங்களது குறிக்கோள் வாழ்க்கையில் உயருவதா? வீடு வாங்குவதா? வியாபாரத்தை மேம்படச் செய்வதா? எதுவாக இருந்தாலும் திட்டங்கள் தேவை. அதற்கான பயிற்சிகள் அனைத்தும் இந்த நூலில் உள்ளன. திட்டமிட்ட குறிக்கோளை அடைவது என்பது சுலபமாகிவிடும். கடும் உழைப்பும், குறிக்கோளைப் பற்றிய சிந்தனையுமே படிகளாகும். உங்களது குறிக்கோளை அடைய இந்நூல் உதவும்.