ரவி பப்ளிகேஷன்ஸ், ராஜ் மகல், 45(2), 4வது அவென்யூ, அசோக் நகர், சென்னை-600 083. (பக்கம்: 208.)
சித்தர்களின் மொழி எளிமையாகக் காணப்படினும், அதில் உள்ள ஞானமோ மிக ஆழமானது. புரிந்து கொள்வது கஷ்டம் என்பதன் காரணத்தை ஆசிரியர் நன்கு விவரிக்கிறார்.ஞானிகள் சிசரோ, புத்த தாசர், அறிஞர்கள் கமில் சுவலபில் முதலியோரின் கருத்துக்கள், திபெத்திய யோகமரபு, உத்தரகீதை, உபநிடதங்கள், முதலியவற்றில் இருந்து மேற்கோள் காட்டியுள்ள பாங்கு சிறப்புடையது.சில மந்திரங்கள் எவ்வாறு தலைகீழ் மொழியில் எழுதப்பட்டுள்ளது (உல்ட் பாம்சி) என்பதை விவரித்துள்ளார் (பக்.147).பஞ்ச மகாரங்கள், குலார்வை தந்திரம், குதம்பைச் சித்தரின் பாடல், மடை மாற்றம் செய்யும் வகை முதலியவற்றைத் தெளிவாக்கியிருக்கிறது.பிரித்து மொழிதல் என்கிற சொல்லணியில் எழுதப்பட்ட திருமூலரின் மந்திரத்தை எளிய தமிழில் நன்கு புரியும்படி எழுதியுள்ளார் (பக்.167).முடிவுரையில் கொடுத்துள்ள அட்டவணை, துணை நூல் பட்டியல் முதலியன நூலின் சிறப்பு அம்சம்.ஒவ்வொரு பாடலுக்கும் தொகுத்துரை, பதவுரை, விருத்திவுரை கொடுத்து, அத்துடன் பல மேற்கோள்களையும் காட்டியுள்ளது நூலின் பெருஞ்சிறப்பு.