விஜயா பதிப்பகம், 20, ராஜ வீதி, கோவை-641 001. (பக்கம்: 48).
"நான் யார்' என்ற கேள்வி எளிதாகத் தோன்றினும், புராணகால நதிகேசன் முதற்கொண்டு சுவாமி விவேகானந்தர் வரையிலான பேரருளாளர்கள் யாவும் உரிய விடை காண இயலாது தத்தளித்து வந்திருக்கின்றனர். பகவான் ரமணரும் இதற்கு விதிவிலக்கல்ல! "நான்' எனும் மூலத்தை தேடும் வேட்கையில், பரமாத்ம சொரூபமும், நமது ஆத்ம சொரூபமும் ஒன்றே என மெய்யாகக் கண்டுணர்ந்த மாமுனிவர், இந்த "சத்-சித்-ஆனந்தம்' எனப்படும் நித்திய ஆனந்த நிலையை அடைந்திடும் நெறிமுறைகளை அருளுரைகளாக உலகினர் உய்யும் பொருட்டு வழங்கியுள்ளார். சுருக்கமாக, இறைவனுக்கும் நமக்கும் உள்ள தொடர்புகள் நன்கு புலப்படும்போது ஒவ்வொருவரும் பண்பட்ட மாமனிதராக, ஞானியாக வழிகோலுகிறது! ஆன்மிக ஆர்வலர்களுக்கு சிறந்த சிறியதோர் கையேடு.