கிழக்கு பதிப்பகம், 33/15, எல்டாம்ஸ் ரோடு, ஆழ்வார்பேட்டை, சென்னை-18. (பக்கம்: 168).
புத்திசாலித்தனமான போர் உத்திகளின் மூலம் ஒரு நாட்டை ஜெயிப்பது சுலபம். ஆனால், அந்த வெற்றி நிலைத்து நிற்க வேண்டுமானால், உள்ளூர் மக்கள் நம்மை ஆக்கிரமிப்பாளர்களாக நினைக்காமல், அன்பான நண்பர்களாக நினைக்க வேண்டும் (பக்.80) என்று வலியுறுத்திய நெப்போலியன், "மன்னராட்சி வேண்டாம் என்று வருடக் கணக்காகப் போராடி ஜெயித்து, அதே காரணத்துக்காக ஏகப்பட்ட நாடுகளைப் பகைத்துக் கொண்டு, கடைசியில் பிரெஞ்சு சாம்ராஜ்ஜியத்தின் பேரரசாக முடிசூட முடிவெடுத்தார் (பக்.120).போப் ஆண்டவருக்கு முன்னால் தலை குனிந்து வணங்குவதை விரும்பாத நெப்போலியன், அவரிடமிருந்து கிரீடத்தைக் கிட்டத்தட்ட பறித்துக் கொண்டதாகவும், தானே தனக்கு முடிசூட்டிக் கொண்டதாகவும் குறிப்புகள் இருக்கின்றன (பக்.124).அடிமட்டத்திலிருந்து வெற்றியின் உச்சத்திற்கு வேகமாகச் சென்று உயர்ந்த மாவீரன் நெப்போலியன், பிறகு தோல்விகளின் பாதாளத்தையும் தொட்ட வரலாற்றை மிகவும் சுருக்கமாகவும் எளிய நடையிலும் ஆசிரியர் விவரித்துள்ளார். நெப்போலியன் வரலாற்றை கதைபோல விறுவிறுப்புடன் படிக்கும் வகையில் அமைந்த அழகிய படைப்பு.