நேதாஜி பிரசுரம், 56/92, அகிம்சாபுரம் 7வது தெரு, செல்லூர், மதுரை-2.பக். 224.
பழைய வரலாறுகளைப் படிப்பதால், நிறைய விஷயங்களை அறிந்து கொள்வதோடு, ஒரு நாட்டின் வரலாற்றை புரட்டிப்போட்ட சம்பவங்களையும், அதனால் ஏற்பட்ட விளைவுகளையும் தெரிந்துகொள்ள முடிகிறது. அதுமட்டுமல்லாமல், வரலாற்று நாயகர்களைப் பற்றி விரிவாக அறிந்துகொள்ள முடிகிறது. அவர்கள் வாழ்க்கை பாதையில் சந்தித்த இன்னல்களும், அதை அவர்கள் சமாளித்த விதமும், நமக்கு நல்ல பாடமாக அமைந்து, நம் பாதையை செம்மைப்படுத்திக் கொள்ள உதவுகிறது.இந்நூலில், 26 தலைப்புகளில் பாபர், அக்பர், சத்ரபதி சிவாஜி, நூர்ஜஹான் முதல் நேரு, படேல், ராஜாஜி, காமராஜர் என பல தலைவர்களைப் பற்றி சுவாரஸ்யமான விஷயங்களை தொகுத்தளித்துள்ளார் நூலாசிரியர்.